எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.
முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்த பாகம் வரும் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பல முன்னணி நடிகர் , நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முதல் பாகக் கதையின் அறிமுக உரையை, கமல்ஹாசன் குரல் பதிவில் வழங்கியிருந்தனர்.
இரண்டாவது பாகத்திலும் கமல்ஹாசன் கதை சுருக்கத்தை விளக்கி இருக்கும் அறிமுக வீடியோவை லைகா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

