பொது பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது ஆதரவளித்தால், அத்தகைய தனி நபர் அல்லது அமைப்புக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்டப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மக்களைத் தூண்டும் வகையில் மக்கள் பிரதிநிதியொருவர் பொறுப்பற்ற முறையில் தெரிவித்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புக்காக வன்முறைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் அரசாங்கமும் சட்டமும் எம்மை பாதுகாக்காது போனால் அது எமது உரிமை எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு பலியாகி, சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என பெருந்தோட்டம் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *