பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்துகொண்டுள்ளார்.
பொதுநலவாய செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
3ஆவது சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி, ஏனைய நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

