ஜனாதிபதி வேட்பாளரொருவரை பொதுஜன பெரமுனவிலிருந்து களமிறக்குவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை. மாறாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவரை ஆதரிப்பது தொடர்பில் கட்சி ரீதியில் கலந்துரையாடி தீர்மானிப்போம்.
எவ்வாறிருப்பினும் எமது ஆதரவின்றி எவருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் கட்சி ரீதியில் வேட்பாளரொருவரை களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அவ்வாறு எவரும் கூறவுமில்லை. எனினும் அடுத்து யார் ஜனாதிபதியானாலும் அவருக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதையே தெரிவித்துள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

