ரமழான் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். காபுல் – ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் திகதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையிலேயே ஆப்கானிஸ்தானில் பெண்கள் ரமழான் கொண்டாட தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அந்நாட்டின் பஹ்லன் மற்றும் தக்ஹர் மாகாணங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொது இடங்கள், பூங்காக்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் ஏற்கனவே தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

