இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனம் பெற்றுள்ள இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.
இத்தாலி மற்றும் ஜேர்மன் ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய தூதுவர்களும், பிரித்தானிய மற்றும் வட அயர்லாந்துக்கான புதிய உயர்ஸ்தானிகருமே இவ்வாறு நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.
பிரித்தானிய மற்றும் வட அயர்லாந்துக்கான உயர்ஸ்தானிகராக ஆண்ட்ரூ பெட்ரிக் , ஜேர்மனுக்கான தூதுவராக கலாநிதி பெலிக்ஸ் நியூமன் , இத்தாலிக்கான தூதுவராக டாமியானோ பிரான்கோவிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நற்சான்று பத்திரங்களைக் கையளித்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

