புதிய சுகாதார செயலாளராக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (DGHS) வைத்தியர் பாலித மஹிபால நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ நிபுணரான வைத்தியர் மஹிபால 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியாக நியமனம் பெறுவதற்கு முன்பு சுகாதார செயலாளராகவும் பிரதி பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் பொது சுகாதாரம், சுகாதார துறை முகாமைத்துவம், வணிக நிர்வாகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் தகுதி பெற்றவராவார்.
Global Fund மற்றும் Gavi – the Vaccine Alliance போன்ற சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இலங்கையின் முதுகலை மருத்துவ நிறுவனத்தில் விரிவுரையாளர் மற்றும் பரீட்சை ஆணையாளராக இருந்தார். இவரது கட்டுரைகள் பல தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

