தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சார்ள்ஸ் அன்டனி ஆகியோரது சடலங்கள் மாத்திரமே இறுதி யுத்தத்தின் போது கண்டு பிடிக்கப்பட்டன. பிரபாகரனின் குடும்பத்தார் தொடர்பான தகவல்கள் எமக்கும் தெரியாது என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
பிரபாகரனின் மனைவியின் சகோதரி எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மற்றும் சார்ள் அன்டனி ஆகியோரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவை தவிர பிரபாகரனின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் எவையும் எமக்குத் தெரியாது.
இயக்கத்தில் இருந்தவர்கள் ஏனையோரை புனர்வாழ்வளித்தல் நிலையங்களிடம் ஒப்படைத்தோம். அதை தவிர எமக்கு வேறு எந்த தகவலும் தெரியாது. அத்தோடு வெளியாகியுள்ள குறித்த காணொளி தொடர்பில் இராணுவம் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

