பிரதமர் மோடி தான் Boss அவுஸ்திரேலிய பிரதமர் புகழாரம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் பொஸ் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணம் மேற்கொண்டு நேற்று அவுஸ்திரேலியா சென்றடைந்தார். 

சிட்னி நகரிலுள்ள குடோஸ் பேங்க் அரீனா எனும்  அரங்கில்  இன்று நடைபெற்ற, பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த இந்திய மக்கள் பங்குபற்றிய நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடியும் அவுஸ்திரேலிய பிரதமர்  அந்தோனி அல்பானீஸும் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ‘நான் இறுதியாக இந்த மேடையில் பிரபல பாடகர் ரொக்ஸ்டார் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை இங்கு பார்த்திருக்கிறேன். அவருக்கு கிடைத்த வரவேற்பை விட நரேந்திர மோடிக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. பிரதர் நரேந்திர மோடி தான் பொஸ்’ என்றார். 

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், கிரிக்கெட், கறி, யோகா, மாஸ்டர்செப் என இரு நாடுகளையும் இணைக்கும் பல விடயங்களை பட்டியலிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *