இலங்கை பாடசாலை ரக்பி சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ரக்பி போட்டி எதிர்வரும் ஜுன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
14 பாடசாலைகள் அணிகள் பங்கேற்கின்ற இப்போட்டித் தொடரில் குழு 1 , குழு 2 என இரண்டு குழுக்களில் தலா 7 அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் குழு 1 இல் கொழும்பு இசிபத்தன கல்லூரி, கொழும்பு சென் ஜோசப் கல்லூரி, கல்கிஸ்சை சென் தோமஸ் கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி, கொழும்பு டி. எஸ். சேனாநாயக்க கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரி ஆகியன இடம்பெறுகின்றன.
குழு 2 இல் பிரிவில் கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரி, மருதானை சாஹிரா கல்லூரி, கல்கிஸ்சை விஞ்ஞான கல்லூரி, கண்டி வித்யார்த்த கல்லூரி, கண்டி திரித்துவ கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜா கல்லூரி ஆகியன அங்கம் வகிக்கின்றன.
கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் டயலொக் ஆசியாட்டாவின் அனுசரணையுடன் இந்த சம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

