பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணம் மர்டன் மாவட்டம் சவால்ட்ஹர் கிராமத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெரிக் இ இன்சப் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய இஸ்லாமிய மத போதகர் நிகர் ஆலம் என்பவர் மத நிந்தனையில் ஈடுபட்டு மத கடவுளை அவமதித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் சிலர் நிகர் ஆலமை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனையடுத்து நிகர் ஆலமை பொலிசார் காப்பாற்றி அருகில் இருந்த கடைக்குள் பூட்டி வைத்துள்ளனர்.
எனினும் அங்கிருந்த சிலர் பொலிஸாரையும் தாக்கிவிட்டு, கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த நிகர் ஆலமை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நிகர் ஆலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

