பாகிஸ்தானின் நூர் மெகல்லாவில் அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் குளிர்சாதன பெட்டி வெடித்து இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியான பரிதாப சம்பவம் பதிவாகியுள்ளது.
சில மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் , குறித்த வீட்டிலிருந்த அனைவரும் தீயால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத்திணறியும் , தீக்காயங்களுக்கு உள்ளாகியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் தடயவியல் நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையிலேயே குளிர்சாதன பெட்டி வெடித்ததால் இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டமை இனங்காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 7 மாத குழந்தை உட்பட 5 சிறுவர்களும் , ஏனைய ஐவரும் உள்ளடங்குகின்றனர். கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் குதித்து வெளியேறிய ஒருவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

