அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவ்ன்ஸ்வெலி நகரத்தில் பேரூந்து தரிப்பிடமொன்றுக்கருகில் நின்றுகொண்டிருந்தவர்கள் காரொன்று மீது வேகமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு , மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் சாரதியை கைது செய்து அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

