யாழ்ப்பாணம் பலாலி – அந்தோனிபுரம் கடற்கரையில் 08 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 26 கிலோகிராமிற்கும் அதிக கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபருடன் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பலாலி பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

