யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீடொன்றில் வைத்து மூன்று வயோதிப பெண்கள் உட்பட ஐவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான 51 வயதுடைய நபரிடமிருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. புங்குடுதீவு பகுதியிலுள்ள அமைந்துள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஜேர்மனியில் சுமார் 20 வருடங்கள் வாழ்ந்து பின்னர் நாடு திரும்பியவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

