சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் உதவி செயலாளர், டொக்டர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

