நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழேயே 989 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

