நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் நடித்துள்ள ‘ஏஜென்ட்’, வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. அதில் ஊர்வசி ரவுதெலா ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். உமைர் சந்து என்ற விமர்சகர், ஊர்வசி பற்றி ட்வீட் செய்திருந்தார். திரை பிரபலங்கள் பற்றி சர்ச்சை பதிவுகளை அடிக்கடி பதிவு செய்பவர் உமைர் சந்து.
ஐரோப்பாவில் நடந்த ‘ஏஜென்ட்’ ஷூட்டிங்கின் போது ஊர்வசிக்கு நடிகர் அகில் தொல்லை கொடுத்தார் என்றும். அவருடன் நடிக்க ஊர்வசிக்கு அசவுகரியமாக இருந்ததாகவும் உமைர் கூறியிருந்தார்.
இதை மறுத்துள்ள ஊர்வசி, ‘நீங்கள் ஒன்றும் என் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் இல்லை. உங்களை போன்று அநாகரிகமாக நடப்பவர்களால் அதிருப்தி அடைகிறேன். நீங்கள் முதிர்ச்சியற்றவர். உங்களால் நானும் என் குடும்பமும் வேதனைக்கு உள்ளானோம். என் வழக்கறிஞர் குழுவால் அவதூறு வழக்கு தொடர, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். நடிகை ஊர்வசி ரவுதெலா, தமிழில் ‘லெஜண்ட்’படத்தில் நடித்திருந்தார்.

