மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையம் ஊடாக நேற்று சனிக்கிழமை நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (23) நடைபெறவுள்ள சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வு நூல் வௌியீட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே இவர்கள் விஜயம் செய்துள்ளனர்.
சிவாஜி கணேசனின் வெற்றிக்கு காரணம் அவரது வசனமா அல்லது உடல் மொழியா எனும் தலைப்பில் பட்டிமன்றமும் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

