பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நீர் கட்டணம் வெவ்வேறு சூத்திரங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படுமென நீர் வழங்கல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நீர் கட்டணம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் இனியும் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

