இலங்கையிலுள்ள தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின் போது , வெறுமனே விருந்தோம்பலை மாத்திரம் வழங்காது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேஷன் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசுமாறு வலியுறுத்தி தாமும் கடிதமொன்றை எழுதவுள்ளதாகவும் மனோ கனேஷன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் கடமையும் , கட்ப்பாடும் உள்ளது. இலங்கை அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தக் கூடிய நிலையிலும் அவர்கள் காணப்படுகின்றனர். எனவே இலங்கையில் காணப்படும் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டியது கட்டாயமாகும். எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டில்லி விஜயத்தின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர் பேச வேண்டும்.
வடக்கு , கிழக்கு மக்கள் சார்பில் அங்குள்ள அரசியல் தலைவர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதைப் போன்று மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணிலுடன் பேசுமாறு வலியுறுத்தி நாமும் கடிதம் எழுதுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

