தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தெஹிவளை Oban ஒழுங்கையிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்றிரவு(19) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 30 வயதான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

