தென் ஆப்பிரிக்கா உலக சாதனை வெற்றி

சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 258/5 என்று குவித்தது ஒரு சாதனை என்றால் அதை விரட்டிய தென் ஆப்பிரிக்கா 259/4 என்று வெற்றி பெற்றது புதிய உலக சாதனையாகும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ததில் கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். ஜான்சன் சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் 118 ரன்கள் விளாசித்தள்ளினார். ரோவ்மென் போவெல் 19 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 28 ரன்களை விளாசினார். ரொமாரியோ ஷெப்பர்ட் 18 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 41 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 258 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 100 ரன்களை விளாசினார். ரீசா ஹென்றிக்ஸ், 28 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாசினார். கடைசியில் அய்டன் மார்க்ரம் 38 ரன்களை விளாச 18.5 ஓவர்களில் 259/4 என்று உலக சாதனை வெற்றி பெற்று தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *