தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை விஷம் கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சராரத் ரங்சிவுதாபாா்ன் (32) என்ற பெண்ணை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் உயிரிழந்த தோழி உள்பட மொத்தம் 13 பேரை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட 13 பேரில் அவரது காதலனும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கொலைகள் நடந்து உள்ளன.
அவரது நண்பரான சிரிபோர்ன் கான்வாங்கின் மரணத்தைத் தொடர்ந்து அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
கொலைகளுக்கான காரணம் பணம் தான் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் நான்கு மாத கர்ப்பிணியான குறித்த முன்பு மனநல பிரச்சினைகளால் பாதிக்கபட்டிருந்தமை கண்டறியப்பட்டு உள்ளது.

