தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது.
இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷை தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகப்படுத்திய செல்வராகவனை, தனுஷ் இயக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

