திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியின் மேற் பகுதியிலிருந்து இருந்து குதித்து காணாமல் போயுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த குறித்த பெண் இன்று (22) பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியின் கீழே குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணைத் தேடும் நடவடிக்கையை திம்புல்ல பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

