செய்தி நிறுவனங்கள் டுவிட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகம் செய்யப்படும் என எலன் மாஸ்க் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் , ‘அடுத்த மாதம் முதல் டுவிட்டர் தளம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும். மாதாந்த கட்டணத்துக்கு பதிவு செய்யாத பயனர்கள் அவ்வப்போது கட்டுரையைப் படிக்க விரும்பும்போது அந்த ஒரு கட்டுரைக்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


