நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 32ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஜீனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கெபி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறன.

