ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்திற்குள் அரசாங்கம் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் என தெரிவித்துள்ள பவ்ரல் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துகின்றது என குற்றம்சாட்டியுள்ளது.
மலையகத்தை பத்துவருடத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 2024 ம் ஆண்டு அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தையும் ஆறுமாதங்களிற்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் சுற்றுநிருபமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது.
.மக்களிற்கு தற்போதுஅவசியமாக உள்ள தேர்தல்களை விட தான் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதும் தேர்தலிற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்குகின்றது என பவ்ரலின் தலைவர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்
நீண்டகாலமாக தாமதமாகிவரும் மாகாணசபைதேர்தல்களையே அவர் மக்களுக்கு மிகவும் அவசியமான தேர்தல் என குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி அமைச்சின் பொறுப்பையும் வகிக்கும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன மாகாணசபை தேர்தல்கள் மேலும் தாமதமாவதை தவிர்க்கவேண்டும் எனவும் ரோகண ஹெட்டியாராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் ஜனநாயகத்திற்கான தளங்கள் நீக்கப்பட்டால் அந்த உரிமைகளை பெறுவதற்காக மக்கள் வேறுவழிகளை நாடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கான நடவடிக்கைகள் ஜூலைமாதம் ஆரம்பமாகவேண்டு;ம் ஒக்டோபர் 17ம் திகதிக்கு முன்னர் தேர்தல்களை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையகம் தீர்மானிக்கவேண்டும் ஜூலையின் முதல்வாரத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகவேண்டும் எனவும் பவ்ரல் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தேர்தல்களை நோக்கமாக கொண்டுஅபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்;கின்றது என ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மலையகத்திற்கான பத்து வருட திட்டங்கள் தொடர்பான சுற்றுநிருபமொன்றை ஜனவரி 24ம் திகதி அரசாங்கம் அனுப்பிவைத்துள்ளது இது பத்து வருட திட்டம் எனினும் 2024ம் ஆண்டிற்கான அனைத்து திட்டங்களும் ஜூலை 31ம் திகதிக்குள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என அரசாங்கம்தெரிவித்துள்ளது
என தெரிவித்துள்ள பவ்ரல்தலைவர் ஒருவருடத்திற்கான நிதியை ஆறுமாதத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு அரசாங்கம் ஏன் உத்தரவிட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலே அரசாங்கத்தின் நோக்கம் என்பது தெளிவாக தெரிகின்றது நிச்சயமாக ஜூலை மாதம்ஜனாதிபதி தேர்தலிற்கான அறிவிப்புவெளியாகும் இந்த அபிவிருத்தி திட்டங்களை பூர்த்தி செய்தால் அது அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

