செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ள செர்பியா நகரத்திற்கு அருகே நேற்று (4) பிற்பகலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர், நகரும் வாகனத்தில் இருந்து தானியங்கி ஆயுதத்தால் துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த நபரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

