சீனாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 11 தோட்டாக்களை சட்ட விரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஹல்மரகஹேவா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட்டே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

