சிஎஸ்எல் – சிஈஆர் இன் இணை இயக்குநர் டிஸ்னா ரட்நாணயக்க இதனை தெரிவித்துள்ளார்.
பல்கலைகழகம் சீன அரசாங்கத்துடன் எந்த இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 இல் இலங்கையில் சி யான் 3 ஆராய்ச்சிதொடர்பான ஒத்துழைப்பில் ஈடுபட்டதன் பின்னர் பல்கலைகழகம் சீன அரசாங்கத்துடன் எந்த இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழகத்தின் சர்வதேச விவகாரங்களிற்கான நிலையத்திடமோ அல்லது துணைவேந்தரிடமோ எந்த தரப்பும் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சி கப்பலுடன் உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும் என எந்த தரப்பும் கேட்டுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019 இல் சி யான் 3 கப்பலுடன் இணைந்து சில ஆராய்ச்சிகளை முன்னெடுத்தோம் அவை முடிவிற்கு வந்துவிட்டன என தெரிவித்துள்ள சிஎஸ்எல் – சிஈஆர் இன் இணை இயக்குநர் டிஸ்னா ரட்நாணயக்க சி யான் 6 கப்பலுடன் எந்த ஆராய்ச்சி ஒத்துழைப்பு குறித்தும் திட்டமிடப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

