காற்று வெளியிடை படம் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் அதிதி ராவ். அவர் அதற்கு பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களிலும் தான் தற்போது அதிகம் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது அதிதி ராவ் நடிகர் சித்தார்த் உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக இது வரை எங்கும் பேசவில்லை. ஆனால் பல இடங்களுக்கு ஜோடியாகவே வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அவர்கள் ஜோடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கின்றனர்.
“Lovely ஜோடி” என ஒரு போட்டோகிராபர் கூற அதிதி அதற்கு ஸ்மைல் மட்டுமே பதிலாக கொடுத்து இருக்கிறார். அதனால் சித்தார்த்தை அவர் காதலித்து வருவதை மறைமுகமாக உறுதிசெய்து விட்டார் என தகவல் தற்போது பரவி வருகிறது.

