குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 54 வீட்டுப் பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று (16) காலை நாட்டை வந்தடைந்தனர்.
இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் மூலம் குறித்த வீட்டுப் பணிப்பெண்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனையோர் பொலன்னறுவை, மொனராகலை, காலி, மாத்தறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

