அருண் ஈவென்ட்ஸ் மற்றும் முரளியின் மெளனராகம் சார்பில், ‘சின்ன குயில் சித்ரா’ லைவ் இன் கான்சர்ட் இசை நிகழ்ச்சி, கோவை குரும்பபாளையத்தில் உள்ள ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மைதானத்தில் வரும் ஜூன் 3-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
லட்சுமி செராமிக்ஸ், போத்தீஸ், ரவி முருகையாவின் தாய் மண்ணே, கணபதி சில்க்ஸ், சத்யா, வைகிங்,தி மார்க் டிரென்ஸ், க்ரோபக்ஸ், கிளஸ்டர் மீடியா கல்லூரி ஆகியவை இசை நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன. திரைப்பட பின்னணிப் பாடகி சித்ரா கலந்துகொண்டு தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். தவிர, இவர்களுடன் சத்யபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு பின்னணிப் பாடகர்களும் பாட உள்ளனர். இதற்கான கட்டணமாக ரூ.500, ரூ.1,000,ரூ.2,000, ரூ.3,000, ரூ.5,000, ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. புக் மைஷோ,பேடிஎம் போன்ற ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். தவிர, மேற்கண்ட நிறுவனங்களிலும் டிக்கெட் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிகழ்வில், மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் உள்ளது. இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வெளியிடும் நிகழ்வு கோவை கிளஸ்டர் மீடியா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. நடிகர் ஆர்யா, நடிகை சித்தி இத்னானி, அருண் ஈவென்ட்ஸ் அருண் ஆகியோர் டிக்கெட் விற்பனையை தொடங்கிவைத்தனர்.

