இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.டில்லி என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை கொழும்துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல் 163.2 மீற்றர் நீளம் கொண்டதாகும்.
இக்கப்பலின் கப்டன் அபிஷேக் குமார் மற்றும் மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அத்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள காலப்பகுதியில் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கும் இக்கப்பலை பார்வையிட வாய்ப்பளிக்கப்படவுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை இக்கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

