கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகியதால் இடம்பெற்ற இவ்விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இயந்திர கோளாறு காரணமாகவே பஸ் கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 18 பேரும், வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் வட்டவளை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

