கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை செய்த வட கொரியா

கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை செலுத்தினோம். இது 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து அதன் கிழக்கு கடற்கரையில் வெடித்தது . இதன்மூலம் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தினோம் . இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வட கொரிய அதிபர் கிம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சோதனையில் எந்தவிதமான ஆயுதத்தை வட கொரியா பயன்படுத்தியது என்பது தெரிவிக்கப்படவில்லை.

வட கொரியாவின் இந்த பரிசோதனை காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மேலும், இந்தப் பரிசோதனையை தென் கொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து தென் கொரிய அதிபர் யுன் சுக் யோல் கூறும்போது, “இம்மாதிரியான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கான விலையை வட கொரியா கொடுக்க நேரிடும்” என்றார்.

ரேடியோ ஆக்டிவ் சுனாமி என்றால் என்ன? – கடலுக்கு அடியில் அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தும்போது, அவை குறிப்பிட்ட தூரம் பயணித்து பின்னர் கடலில் வெடித்து சிதறும்போது ரேடியோ ஆக்டிv அலைகள் ஏற்படும். இவையே சுனாமி அலைகள் என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *