முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மழைக்காலத்தில் நீர் உட்புகாதவாறு மழை நீர் தடுப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கொட்டகையும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவின் பணிப்புரைக்கு அமைய, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பகுதியில் கொக்குளாய் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

