குவித்தோவா சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவுடன் (23 வயது, 10வது ரேங்க்) மோதிய குவித்தோவா (33 வயது, 15வது ரேங்க்), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-6 (16-14) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

அதே வேகத்துடன் 2வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய அவர், ரைபாகினாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து 7-6 (16-14), 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது.

தொடர்ச்சியாக 13 வெற்றிகளைக் குவித்திருந்த ரைபாகினாவின் வெற்றிப் பயணம் மயாமி ஓபன் பைனல் தோல்வியால் முடிவுக்கு வந்தது. குவித்தோவா தனது 30வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. டபுள்யு.டி.ஏ 1000 அந்தஸ்து தொடர்களில் அவர் பெற்ற 9வது பட்டம் இது. இந்த வெற்றியால் 2021 செப்டம்பருக்குப் பிறகு குவித்தோவா மீண்டும் டாப் 10ல் இடம் பெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *