வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமான இன்று (30) காலை யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை முன்னெடுத்தனர்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
யாழ். பேருந்து நிலையத்தில் ஆரம்பமான இப்போராட்டம் அங்கிருந்து பேரணியாக யாழ்ப்பாண நகரைச் சுற்றி, யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலடி வரை சென்று நிறைவு பெற்றது.

