வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 170 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காகவும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ( MIZUKOSHI Hideaki) தெரிவித்துள்ளார்
இந்த வருடத்திற்கான ஜப்பானின் அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள காணிகளை சுத்திகரிக்க எதிர்பார்க்கப்படுவதோடு, இடம்பெயர்ந்த 400-க்கும் மேற்பட்டவர்ளை மீள குடியமர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இதுவரை 43 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

