ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகி இருந்தது.
கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் பெருங்கடலில் அரசுக்கு எதிராக நடக்கும் விஷயத்தை மையமாக கொண்டு உருவாகி வெளியானது.
படத்திற்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால் அடுத்தடுத்து விமர்சனங்கள் கொஞ்சம் மோசமாக வர படத்தின் வசூலும் குறைந்தது.
தற்போது படம் அகிலன் திரைப்பயணத்தில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் இது மோசமான வசூல் செய்த படமாக அமைந்துள்ளதாம்.


