கடனை திருப்பி செலுத்துவதற்கு 12 வருடகால அவகாசம் – இந்திய கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் தலைவர்

இலங்கை தன்னிடம் பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்கு 12வருடகால அவகாசத்தை இந்தியா வழங்கவுள்ளது.

இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்காக இலங்கை தன்னிடம் பெற்ற கடன்களை மீள திருப்பி செலுத்துவதற்கு 12வருடகால அவகாசத்தை வழங்ககூடு;ம் என இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன அதன் பி;ன்னர் மறுசீரமைப்பு தொடர்பான திட்டம் வெளியாகும்  நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தி;ற்குள் எங்கள் பணத்தை மீட்டெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று நான்கு வருடங்களில் இவற்றை பெறவேண்டும் ஆனால் அதனை 10-12 வருடங்களிற்கு நீடிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *