நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸுடன் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இவர் தனது உடலில் தனது பெயரான ‘ஷ்ருதி’ என்பது உட்பட 5 டாட்டூக்களை குத்தியுள்ளார். இந்நிலையில் இப்போது புதிதாக, வேல் ஒன்றை டாட்டூவாக வரைந்துள்ளார். இதை அவர் காதலர் சாந்தனு வடிவமைத்துள்ளார்.
இதுபற்றி தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “நான் எப்போதும் ஆன்மீக நாட்டம் கொண்டவள். முருகப்பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு. இந்தடாட்டூ மூலம் எனது பக்தியை வெளிப்படுத்த விரும்பினேன். இதை குவஹாட்டியில் சாந்தனு வடிவமைத்தார். 19 வயதில் என் பெயரை டாட்டூவாக பதிவு செய்தேன். இப்போது அதில் முருகனின் வேல் படத்தை வரைந்துள்ளேன். இது, நான் பாதுகாப்பாக இருப்பதை நினைவூட்டுகிறது” என்றுகூறியுள்ளார்.

