எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தத்தின் கப்பல் மூலம் இலங்கை கடலில் ஏறபட்ட பாதிப்புகளிற்கு இழப்பீட்டை கோரும் வழக்கை இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணம் இதனை உறுதி செய்துள்ளார்.சிங்கப்பூரில் உள்ள சட்டநிறுவனமொன்றின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீட்டு தொகை குறித்து நீதிமன்றத்திற்கு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

