உலகின் மிக வேகமான பெண்மணியாக அமெரிக்காவின் Sha’Carri Richardson

அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை Sha’Carri Richardson, உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்துள்ளார்.

ஹங்கேரியாவில் நடைபெறும் 2023 தடகள உலக சாம்பின்ஷிப் போட்டிகளில் மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

போட்டியை அவர் 10.65 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார்.

இது மகளிருக்கான 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் இவ்வருடம் வீராங்கனை ஒருவர் வௌிக்காட்டிய அதிகூடிய தேர்ச்சியாகும்.

கடந்த முறை உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்த ஜமைக்காவின் ஷெலீ-ஆன் ப்ரேஸர் – ப்ரைஸ் இம்முறை மூன்றாம் இடத்தை பிடித்தார்.

அவர் போட்டியை 10.77 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.

கடந்த முறை உலகின் மிக வேகமான பெண்மணியாக சாதனை படைத்த ஜமைக்காவின் Shelly-Ann Fraser-Pryce
இம்முறை மூன்றாம் இடத்தை பிடித்தார்.

அவர் போட்டியை 10.77 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *