கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2022) பெறுபேறுகளை எதிர்வரும் ஆகஸ்ட் இறுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெற வேண்டிய உயர்தர பரீட்சைகளை நவம்பரிலும் , டிசம்பரில் நடைபெற வேண்டிய சாதாரண தரபரீட்சைகளை 2024 மார்ச்சிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2019/2020 உயர்தர பரீட்சைக்கு தோற்றி கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் , அடுத்த மாதமளவில் அவர்கள் கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படுவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

