இலங்கை தமிழரசுக்கட்சி , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கடிதம் அனுப்ப தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ள நிலையில் , அவரிடம் வலியுறுத்தப்பட வேண்டிய விடயங்களைக் குறிப்பிட்டு இக்கட்சிகள் கடிதம் அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே பிரதமர் மோடிக்கான கடிதத்தை , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

