ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள செம்மான் மாகாணம் டம்கான் நகரில் இராணுவ தளவாட மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த மையத்தில் வெடிகுண்டுகளை தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது சற்றும் எதிர்பாராதவிதமாக அங்கு பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் இரு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத. மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

